பீகார், அஸ்ஸாம் மாநிலங்களில் தொடரும் கனமழை - 47 பேர் பலி - லட்சக்கணக்கானோர் பாதிப்பு - வெள்ளம்பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

Jul 30 2016 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

அஸ்ஸாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார். அம்மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தென்மேற்குப் பருவமழை சில நாட்களாக வலுவடைந்துள்ளதால் பல மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை 21 பேர் உயிரிழந்ததாகவும், 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டான் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அஸ்ஸாம் மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லக்ஷ்மிபூர், Golaghat, ஜோர்கத் உட்பட பெரும்பாலான மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மாநில பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால் சூழப்பட்ட இடங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த Nagaon, Morigaon ஆகிய மாவட்டங்கள் மற்றும் Kaziranga தேசிய பூங்கா பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார். இதனைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சர் திரு.Sarbananda Sonowal மற்றும் அதிகாரிகளுடன் கவுகாத்தியில் ஆலோசனை நடத்துகிறார்.

பீகாரில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். பூர்ணியா, கத்தியார், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோசி உட்பட பல ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை அங்கிருந்து வெளியேற்ற 8 ஆயிரத்து 850 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00