நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் வழக்கு : டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ. ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோர் நேரில் ஆஜர்

Jul 27 2016 9:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ. ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோர் இன்று நேரில் ஆஜராகினர்.

முந்தைய மத்திய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராஜா, தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, புலன் விசாரணை நடத்திய C.B.I. அதிகாரிகள், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோரை கைது செய்தனர். டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட ஆ.ராஜா, கனிமொழி ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் பின்னர் வெளியே வந்தனர்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த 2011-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் C.B.I. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆ. ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00