Whatsapp-க்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு - தேச பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் என்பதால், உடனடியாக தடை செய்யக் கோரிக்கை - வரும் 29-ம் தேதி மனு விசாரணைக்கு வருகிறது

Jun 25 2016 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

Whatsapp மூலம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும், எனவே Whatsapp-க்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ளது.

கதிர் யாதவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், Whatsapp பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் கடந்த 5-ம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள என குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றங்கள் மூலம் Whatsapp வழியாக அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்கவும், படிக்கவும் முடியும். இரு பயனாளிகளுக்கு இடையே பரிமாறப்படும் தகவல்களை Whatsapp நிறுவனமோ மற்றும் யாருமோ பெற முடியாது. தேச பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளுக்காக Whatsapp வழியாக அனுப்பப்படும் அழைப்புகளை ஆய்வு செய்ய முடியாத நிலைமை ஏற்படும். அதிநவீன கணினிகளாலும் கூட இந்த உரையாடலை இடைமறித்து கேட்க முடியாது. இந்த வசதி தீவிரவாதிகளும், தேச விரோதிகளுக்கும் உதவிடும் வகையில் அமையக்கூடும். தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், Whatsapp-க்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. T.S. தாகூர் தலைமையிலான அமர்வு முன்பு வரும் 29-ம் தேதி விசாரணை வரவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00