சீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

Jun 25 2016 7:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் அவற்றை நுகர்வதில், சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் மட்டும் பால் பொருட்களின் உற்பத்தி 146 புள்ளி மூன்று ஒன்று மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முதலாக, சீனாவில் இருந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான பொருட்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களில் melamine எனும் ஆபத்தான ரசாயனம் இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ரசாயனம் பிளாஸ்டிக் மற்றும் உரங்களில் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது. இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வரை தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00