உடல் முழுவதும் 500 இடங்களில் பல நாடுகளின் கொடிகளை பச்சை குத்தி டெல்லியைச் சேர்ந்த முதியவர் கின்னஸ் சாதனை

Sep 2 2016 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக சாதனையில் ஆர்வமிக்க டெல்லியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், உடல் முழுவதும் 500 இடங்களில், பல நாடுகளின் கொடிகளை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்து வரும் 74 வயது முதியவரான ஹர் பிரகாஷ் ரிஷி கடந்த 1990-ம் ஆண்டு ஆயிரத்து ஓர் மணி நேரம் இரு சக்கர வாகனத்தில் சவாரி செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்த சாதனைக்குப் பின்னர் பல வினோத செயல்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட உலக சாதனை படைத்துள்ளார். தற்போது உடல் முழுவதும் 500 இடங்களில் பச்சை குத்தியுள்ள ரிஷி, அதில் 366 நாடுகளின் தேசிய கொடிகளை வரைந்துள்ளார். மேலும் உலக சாதனை படைக்க உடலில் மீதமுள்ள இடங்களிலும், உலகத் தலைவர்களின் உருவங்களை பச்சை குத்தி வருகிறார். வாயில் ஒரே நேரத்தில் 50 எரியும் மெழுகுவர்த்திகளை திணித்து சாதனை நிகழ்த்தியுள்ள பிரகாஷ் ரிஷி, 500 உறிஞ்சும் ஸ்டாராக்களை வாயில் திணித்து சாதனை படைக்க தன் அனைத்து பற்களையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல சாதனைகளை படைத்துள்ள ஹர் பிரகாஷ் ரிஷி, கின்னஸ் ரிஷி என்று அழைக்கப்டுகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00