மேற்கு வங்க முதலமைச்சராக 2-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்பு : கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் கே.என். திரிபாதி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் - முதலமைச்சருடன் 41 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்

May 27 2016 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்க மாநில முதலமைச்சராக செல்வி மம்தா பானர்ஜி, இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 41 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், இவர்களுக்கு, ஆளுநர் திரு. கே.என். திரிபாதி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றில் இரு பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதன்மூலம் செல்வி மம்தா பானர்ஜி, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

இன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட செல்வி மம்தா பானர்ஜிக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, செல்வி மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தொடர்ந்து 2-வது முறையாக மகத்தான வெற்றி பெற்றிருப்பது கொண்டாடப்பட வேண்டிய சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அமைச்சரவை கொல்கத்தாவில் இன்று பதவியேற்றுக் கொண்டது. நண்பகல் 12.30 மணி அளவில் செல்வி மம்தா பானர்ஜிக்கும், 41 அமைச்சர்களுக்கும் ஆளுநர் கே.என். திரிபாதி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

செல்வி மம்தா பானர்ஜி அமைச்சரவையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமிரத்தன் சுக்லா, கொல்கத்தா மேயர் ஷோவன் உள்ளிட்ட 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு. அருண்ஜேட்லி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. அஹமத் பட்டேல், டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் திரு. நிதீஷ் குமார், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த திரு. ஃபரூக் அப்துல்லா, பூட்டான் பிரதமர், பங்களாதேஷ் அமைச்சர் அமீர் உசேன் அமு, பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00