கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்கிறது - பினராயி விஜயன் புதிய முதல்வராகிறார்

May 25 2016 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான புதிய அரசு இன்று பொறுப்பேற்கிறது. திருவனந்தபுரத்தில் மாலையில் நடைபெறும் விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் திரு.பினராயி விஜயன் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

அண்மையில் கேரள சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 140 இடங்களில் 91 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் முதன்முறையாக கேரள முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அவருடன் 18 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்கவுள்ளனர். மாலை 4 மணி அளவில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அம்மாநில ஆளுநர் திரு.சதாசிவம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00