புதுச்சேரி சட்டமன்றப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் துணை தேர்தல் ஆணையர் ஆய்வு

May 4 2016 6:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி சட்டமன்றப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, துணை தேர்தல் ஆணையர் திரு. உமேஷ் சின்ஹா, தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில், 344 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து துணை தேர்தல் ஆணையர் திரு. உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி திரு. கந்தவேல், மாவட்ட தேர்தல் அதிகாரி திரு. ஜவஹர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 100 சதவீத வாக்குப்பதிவு, நேர்மையான தேர்தல், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் செயல்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திரு. உமேஷ் சின்ஹா கேட்டறிந்தார். பின்னர், வாக்காளர் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக மேக்தூத் அஞ்சல் அட்டையையும் வெளியிட்டு, வாக்காளர்களுக்கு 3 லட்சம் அஞ்சல் அட்டையை அனுப்பிவைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00