முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் நடைபெற்ற ஊழல் - முன்னாள் விமானப்படை தளபதி, அவரது சகோதரர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

May 2 2016 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்ற விவகாரம் குறித்து முன்னாள் விமானப் படை தளபதி மற்றும் அவரது சகோதரர்களிடம் சி.பி.ஐ. இன்று விசாரணை நடத்திவருகிறது. இந்த விசாரணை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுர்கள் பயன்படுத்துவதற்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த Augusta Westland என்ற நிறுவனத்திடமிருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் கொண்ட, 12 ஹெலிகாப்டர்களை வாங்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்தது. இந்த பேரத்தில் விமான நிறுவனம் அப்போது விமானப்படை தளபதியாக இருந்த திரு. S.P.தியாகி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கப் பிரிவும் திரு. S.P.தியாகிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அடுத்தகட்டமாக, திரு. S.P.தியாகி மற்றும் அவரது சகோதரர்கள் இருவரிடம் சி.பி.ஐ. இன்று விசாரணை மேற்கொண்டுள்ளது. சி.பி.ஐ.க்கு புதிதாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யும்போது, அவற்றுக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இத்தகைய ஹெலிகாப்டர்கள் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக, குறைந்த உயரத்தில் பறக்க கூடிய திறன்கொண்டதாக இருந்தால் போதுமானது என தகுதியை மாற்றி திரு. S.P.தியாகி உத்தரவிட்டார் என புகார் எழுந்திருப்பது குறிப்பிடதக்கது. இந்த விசாரணை காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00