இந்தியப் பெருங்கடலில் சீன போர் கப்பல்களின் நடமாட்டத்தை அடுத்து, மாலத்தீவுக்கு விரைந்தது இந்திய போர் கப்பல் - விமானம் தாங்கி கப்பல்களும் அனுப்பப்பட்டன

Feb 14 2016 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீன போர் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, அதனை சமாளிக்கும் வகையில், இந்தியா புதிய வியூகம் வகுத்துள்ளது. அதன்படி, 44 ஆயிரம் டன் எடைகொண்ட போர்க்கப்பலும், விமானம் தாங்கி கப்பல்களும் மாலத்தீவுக்கு விரைந்துள்ளன.

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் நிலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் சீன போர் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, அதனை சமாளிக்கும் வகையில், இந்தியாவும் தனது போர்க்கப்பலை தற்போது மாலத்தீவுக்கு அனுப்பிவைத்துள்ளது. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுடன், ஐ.என்.எஸ். மைசூர் என்ற போர்க்கப்பலும் மாலத்தீவுக்கு விரைந்துள்ளன. நாளை முதல் 18-ம் தேதிவரை இக்கப்பல்கள் மாலத்தீவில் நங்கூரமிட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதியை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கு வலுவான தளம் ஏற்படுவதை தடுப்பதே இதன் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00