தொண்டைப் புற்றுநோயால் பேசும் சக்தியை இழந்தவர்களுக்கு உதவியாக, புதிய குரல் கருவியை பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் கண்டுபிடிப்பு : விலை மிகவும் மலிவாக இருப்பதால் ஏழை-எளிய மக்கள்கூட பயன்படுத்த முடியும்

Sep 3 2016 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொண்டைப் புற்றுநோயால் பேசும் சக்தியை இழந்தவர்களுக்கு உதவியாக, புதிய குரல் கருவி ஒன்றை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதன் விலை மிகவும் மலிவாக இருப்பதால், ஏழை-எளிய மக்கள்கூட இதனை பயன்படுத்த முடியும்.

தொண்டைப் புற்றுநோய் காரணமாக, குரல் நாண்கள் பாதிக்கப்பட்டு பெரும்பாலானோர் பேசும் ஆற்றலை இழந்து விடுகின்றனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் விஷால் ராவ் என்பவர் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 'ஓம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய கருவி, 50 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த மருத்துவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டுவதால், குறைந்த விலையில் இந்தக் கருவியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். விலை மலிவாக இருந்தபோதிலும், இதன் தரம் மேம்பட்டதாக இருக்கும் என்றும் மருத்துவர் விஷால் ராவ் தெரிவித்தார். புற்றுநோய் மட்டுமின்றி, நரம்புகள் பாதிக்கப்பட்டு பேசமுடியாமல் போன நோயாளிகளுக்கும் இந்தக் கருவி மிகவும் உதவிகரமாக இருக்கும் என மருத்துவர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00