மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய ரிசர்வேஷன் டிக்கெட் கட்டணங்களை அதிகரிக்க ரயில்வேதுறை முடிவு

Nov 28 2015 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய ரிசர்வேஷன் டிக்கெட் கட்டணங்களை அதிகரிக்க ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது. ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தற்போது பிடித்தம் செய்யப்படும் கட்டணத்தை 2 மடங்காக உயர்த்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது, தற்போது உள்ளதைவிட, 2 மடங்கு பணம் பிடித்தம் செய்யும் நடைமுறையை ரயில்வேதுறை கடந்த 13-ம் தேதி முதல் ஒருவாரகாலத்திற்கு குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் பயணிகள் பொறுப்பற்ற முறையில் கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்யும் போக்கு குறைந்திருக்கிறது என்றும், டிக்கெட்டை ரத்து செய்யும்போது, 2 மடங்கு பணம் பிடித்ததால், ரயில்வே துறைக்கு வருமானம் அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நடைமுறையை விரைவில் நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்போவதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது. மேலும், ரயில்வேதுறையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய ரிசர்வேஷன் டிக்கெட் கட்டணங்களை அதிகரிக்கவும் ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00