ராணுவத்தில் பெண்களின் பங்கு குறித்த கொள்கை முடிவு விரைவில் அறிவிக்கப்படும் : மத்திய பாதுகாப்புத் துறை தகவல்

Oct 9 2015 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராணுவத்தில் பெண்களின் பங்கு குறித்த கொள்கை முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் 83-வது ஆண்டு தினத்தையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்திய விமானப்படைத் தளபதி அரூப் ராஹா, விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களில் விமானியாக தற்போது மகளிர் பணியாற்றிவருவதாகவும், இனிமேல், போர்விமானங்களிலும் மகளிரைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த யோசனை, மத்திய பாதுகாப்புத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், இத்தகைய திட்டத்தினை வரவேற்பதாகவும், எனினும் இதில் உள்ள நடைமுறை சிரமங்கள் குறித்து ஆராய்ந்தபிறகு, இதுபற்றிய கொள்கை முடிவு ஒன்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00