பாகிஸ்தானுடன் அணு சக்தி உடன்பாடு - அமெரிக்காவின் திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

Oct 9 2015 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானுடன் அணு சக்தி உடன்பாடு செய்துகொள்வது குறித்து, அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா இதுதொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு அணு சக்தித் துறையில் இருநாடுகளும் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இந்தியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை வேறு எந்தநாட்டிற்கும் அளிப்பதில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்நிலையில், இதேபோன்ற ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்தான் அரசுடன் செய்துகொள்ள அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மத்திய அரசு பெரிதும் கவலையடைந்துள்ளது. பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்துவருவதாகவும், அமெரிக்கா இத்தகைய உடன்பாட்டில் கையெழுத்திடும் முன்பு, பாகிஸ்தானின் நம்பகத்தன்மை குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு.விகாஸ்ஸ்வரூப் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு. நரேந்திரமோடி இந்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், பிரபல அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00