கர்நாடக மாநிலத்தின் பிரபல எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்

Aug 31 2015 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலத்தின் பிரபல எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற கல்வியாளரான கல்பர்கி, ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்களையும், புதுமைகளையும் கொண்டு வந்தவர். கற்பிப்பதில் புது யுக்திகளைக் கொண்ட பாட நூல்களை அறிமுகப்படுத்தியதோடு, 10க்கும் மேற்பட்ட பகுத்தறிவு நூல்களையும் எழுதியுள்ளார். இதனால், மதவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளான நிலையிலும் கல்பர்கி, தொடர்ந்து பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், பழைய மாணவர்கள் எனக் கூறிக்கொண்டு, அவரது இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த 2 மர்ம நபர்கள், வீட்டில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த கல்பர்கியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து கர்நாடக கல்வி மற்றும் இலக்கிய உலக பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல், மத்திய சட்ட அமைச்சர் திரு. சதானந்த கவுடா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு. குண்டுராவ் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் Kalburgi படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00