முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் - அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

Aug 29 2015 6:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சர்திரு. வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்றது. ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள லலித்மோடிக்கு, மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா உதவியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் வியாபம் பணியாளர் தேர்வு வாரிய ஊழல் புகார் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின. மேலும், நிலம் கையகப்படுத்துதல், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இயலாமல் போனது. இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு அமர்வு அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00