சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் நிலையான தன்மை ஏற்படும் - எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பு நம்பிக்கை

Jul 31 2015 6:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என OPEC அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டதையடுத்து, அதன் தாக்கம் பெட்ரோலிய பொருட்களின் சர்வதேச சந்தையில் எதிரொலித்தது. இதனால், கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்த நிலையில், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC-ன் தலைவர் அப்துல்லா அல்பத்ரி நேற்று மாஸ்கோவில் அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக்கை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அல்பத்ரி, பல்வேறு அரசியல் காரணங்களால் சர்வதேச எண்ணெய் சந்தை பெரும் தாக்கத்துக்கு உள்ளானதாக குறிப்பிட்டார்.

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்த விவகாரமே பெட்ரோலியப் பொருட்களின் நிலையற்றத் தன்மைக்குக் காரணம் என ரஷ்ய அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக் கூறினார். எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோலியப் பொருட்களின் விலை இயல்பு நிலைக்கு வரும் என்றும், இதனால் அடுத்த ஆண்டு முழுவதும் கச்சா எண்ணெய் விலையில், ஒரு நிலைத்த தன்மை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அல்பத்ரி நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00