காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பெருமளவில் நிதியுதவி அளித்து வந்ததாக ரா உளவு அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு

Jul 4 2015 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானிக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பெருமளவில் நிதியுதவி அளித்து வந்ததாக, ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவரான Dulat, கடந்த 2000-ம் ஆண்டு வரை அப்பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் திரு. வாஜ்பாய் அலுவலகத்தில், காஷ்மீர் விவகாரத்திற்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது துலாட் எழுதி வெளிவந்துள்ள புத்தகத்தில், கிலானி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் லண்டன் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த அயூப் தாகூர் மூலமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவராக கிலானிக்கு பெருமளவில் நிதியுதவி கிடைக்கப் பெற்றதாக அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2001-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2002-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை மட்டும் கிலானிக்கு 20 முறை பெருமளவு பணம் கைமாற்றப்பட்டதாக துலாட் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இந்திய உளவு அமைப்பான IB-க்கு தெரியவந்ததும், கிலானி இல்லத்தில் ரகசிய வருமான வரி சோதனை 2002-ம் ஆண்டு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல். ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக்-க்கும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டதாக துலாட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். துலாட் எழுதிய புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00