நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு

Jul 4 2015 7:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திரு.யோகி ஆதித்யநாத் தலைமையிலான நாடாளுமன்ற குழு பல்வேறு அதிரடியான பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்திருந்தது. அதன்படி, எம்.பி.க்களின் ஊதியத்தை 100 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும், ஓய்வுபெற்ற எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை தற்போது உள்ள 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, இரட்டிப்பாக்கலாம் என்றும் இக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தது. இதனை பரிசீலித்த நாடாளுமன்ற விவகார அமைச்சகம், ஊதிய உயர்வை 100 சதவீதமாக உயர்த்த மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், எம்.பி.க்களின் தினசரி படியை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது, இலவச விமான பயணத்தை 34-ல் இருந்து 48 ஆக அதிகரிப்பது, முன்னாள் எம்.பி.க்களுக்கும் இலவச விமான பயணத்தை அனுமதிப்பது போன்ற பரிந்துரைகளையும் அரசு நிராகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00