கேரளாவில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு : போலீசுக்‍கு பயந்து சிறுமியை விட்டுவிட்டு தப்பியோடிய கடத்தல் கும்பல்

Nov 28 2023 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலம் கொல்லத்தில் 5 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கொல்லம் அருகே உள்ள ஓயூர் பகுதியை சேர்ந்த ரெஜி என்பவரின் 6 வயது மகள் அபிகேல் சாரா டியூசனுக்கு சென்றபோது காரில் வந்த கும்பல் சிறுமியை கடத்தி சென்றது. பின்னர் சிறுமியின் தாயை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல், குழந்தை வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டு சிறுமியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, போலி பதிவெண் கொண்ட காரில் சிறுமி கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், போலீசாருக்‍கு பயந்த கடத்தல் கும்பல் சிறுமியை கொல்லம் ஆசிரமம் மைதானம் அருகே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளது. மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்‍கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00