சத்தீஸ்கரில் மக்களுடன் உரையாடியபடி ரயிலில் பயணம் செய்த ராகுல்காந்தி : பிலாஸ்பூர்-இத்வாரி இன்டர்சிட்டி ரயிலில் ராகுல்காந்தி பயணம்
Sep 26 2023 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி சத்தீஸ்கரில் மக்களுடன் உரையாடியபடி ரயிலில் பயணம் செய்தார். காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஒருநாள் பயணமாக ராகுல் காந்தி அந்த மாநிலத்திற்குச் சென்றார். அப்போது பிலாஸ்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்குப் பின் பிலாஸ்பூர்-இத்வாரி இன்டர்சிட்டி ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் ராகுல்காந்தி பயணம் செய்தார். ரயில் பயணத்தின்போது குழந்தைகள் உட்பட பயணிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார்.