இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் : அமெரிக்கா, கனடாவில் இந்திய மாணவர்கள் மருத்துவ உயர் கல்வி படிக்கலாம்
Sep 21 2023 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய இளங்கலை மருத்துவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் முதுநிலை மருத்துவம் பயின்று பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உயர்கல்வியை இந்திய மாணவர்கள் மேற்கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள 706 மருத்துவ கல்லூரிக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும் என்பதால் இந்திய மருத்துவ மாணவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.