காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா : காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மனு
Sep 21 2023 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் எம்பிக்கள் சந்தித்தனர். காவிரி ஒழுங்காற்று வாரியம் தமிழகத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட வேண்டும என உத்தரவிட்டாலும் கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கடந்த 19ம் தேதி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரி மனு அளித்தனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் மாநில எம்பிக்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என மனு அளித்தனர்.