சூரியன் மறைவால் ஸ்லீப்பிங் மோடுக்கு சென்ற விக்ரம் லேண்டர் : நாளை மீண்டும் கண்விழித்து ஆய்வுகளை தொடங்கும் என இஸ்ரோ தகவல்
Sep 21 2023 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர், சூரியன் மறைவால் ஸ்லீப்பிங் மோடுக்கு சென்ற நிலையில், நாளை மீண்டும் கண்விழித்து ஆய்வுகளை தொடங்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து, நிலவில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. சூரியன் மறைவால் ரோவர் ஸ்லீப்பிங் மோடுக்கு சென்ற நிலையில், தற்போது நிலவின் தென் துருவப் பகுதியில் சூரிய உதயம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள சூரிய மின்தகடுகள் மூலம் மின்சார உற்பத்தியானது செய்யப்பட்டு, நாளை விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.