ஹூக்கா பார்களை தடை செய்ய கர்நாடகா அரசு திட்டம் : புகையிலை பொருட்களுக்கான குறைந்தபட்ச வயதை 21ஆக உயர்த்த திட்டம்
Sep 21 2023 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் ஹூக்கா பார்களை தடை செய்யவும், புகையிலை பொருட்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பள்ளி, கோயில்கள், மசூதிகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளைச் சுற்றி புகையிலைப் பொருட்களின் விற்பனையை தடை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். மேலும், ஹூக்கா பார்கள் மீது இளைஞர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதால், அதனை தடை செய்யவும், புகையிலை பொருட்களை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளனர்.