கூட்டுறவு துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : அமைச்சரவை குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 31 2023 7:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூட்டுறவு துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,ஒரு லட்சம் கோடி ரூபாயில், ஒவ்வொரு வட்டத்திலும் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு நிறுவப்படும் என்றார். குடோன்களை நிறுவுவதன் மூலம் நாட்டில் விவசாய சேமிப்பு உள்கட்டமைப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.