ரேஷன் கடைகளில் மீண்டும் இலவச அரிசி, மானிய விலையில் சிறுதானியங்கள் வழங்கப்படும் : புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

Mar 28 2023 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, இலவச அரிசி மற்றும் மானிய விலையில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத ஊதியம் வழங்க 7 புள்ளி 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் 10 கிலோ முதல் 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை, சிறுதானியம் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கூட்டுறவு சங்கத்தில் வீட்டுக்‍கடன் வாங்கியவர்கள், அசலை மட்டும் செலுத்தினால் அதற்குரிய வட்டி, அபராத வட்டி ஆகியன தள்ளுபடி செய்யப்படும் என்றும், கடந்த தேர்தலின்போது பணி நீக்கம் செய்யப்பட்ட 716 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00