விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் : 9 செயற்கைக்‍கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது

Nov 26 2022 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து PSLV C-54 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதில் அனுப்பப்பட்ட 9 செயற்கைக்‍கோள்களும், புவி சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்டப்படி நிலை நிறுத்தப்பட்டன.

PSLV C-54 ராக்‍கெட்டுக்‍கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் PSLV C-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ வடிவமைத்த புவி கண்காணிப்புக்கான EOS-6 நவீன செயற்கைக்கோள் அதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. ஆயிரத்து 117 கிலோ எடை கொண்ட EOS-6 செயற்கைக்கோள், ஓசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4-வது ஆய்வு கலமாகும்.

கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்க EOS-6 செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தவிர, அமெரிக்காவின் 4 செயற்கைக்கோள்களும், இந்தியா - பூடான் கூட்டு தயாரிப்பான 2 செயற்கைக்கோள்களும் PSLV C-54 ராக்கெட்டில் விண்ணுக்‍கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராக்‍கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைக்‍கோள்களும் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00