சிங்கத்திடமிருந்து தப்ப முயன்று மரத்தில் ஏறிய நபர் : மரத்தில் வேகமாக ஏறிய சிங்கத்திடம் சிக்கிக்கொண்டு தவிப்பு
Nov 26 2022 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கத்திடம் இருந்து தப்ப முயன்ற நபர் ஒருவர், அதற்கு மரம் ஏறத் தெரியாது என நினைத்து மரத்தில் ஏறி மாட்டிக்கொண்டது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இணையத்தில் பதிவிடப்படும் சில வீடியோக்கள், தொடர்ந்து பல முறை வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது. இதே போல் ஏற்கெனவே பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஒரு வீட்டில் நடைபெற்ற விஷேசத்தின் போது அங்கே ஏராளமான உறவினர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு ஒரு பெண் சிங்கம் வந்தது. அதனிடம் இருந்து தப்ப முயன்ற ஒரு நபர் மரத்தில் ஏறிக்கொண்டார். ஆனால், அவரது பின்னாலேயே அந்தச் சிங்கமும் மரத்தில் ஏறியது. இக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.