2 நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி - கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் சோனியா காந்தியும் பங்கேற்பு

Oct 6 2022 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரி காரணமாக கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்திய ஒற்றுமை யாத்திரையை திரு. ராகுல் காந்தி கர்நாடகாவில் இன்று மீண்டும் தொடங்கினார். அவருடன் திருமதி. சோனியா காந்தியும் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக பாரத் ஜோடோ என்ற நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்த நடைபயணத்தை திரு. ராகுல் காந்தி முன்னின்று நடத்தி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களைச் சந்தித்து வருகிறார். தமிழகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கிய பயணம், கேரளாவை தொடர்ந்து, தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆயுதபூஜை, விஜயதசமியை ஒட்டி, கடந்த 2 நாட்களாக தனது நடைபயணத்திற்கு ஓய்வளித்திருந்த திரு. ராகுல் காந்தி, யாத்திரையை இன்று மீண்டும் தொடங்கினார். மாண்டியாவில் இன்று காலை தொடங்கிய யாத்திரையில், திரு. ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் இடைக்‍காலத் தலைவர் திருமதி. சோனியா காந்தியும் இணைந்துள்ளார்.

இன்றைய நடைபயணத்தில், திருமதி. சோனியா காந்தியுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் இதுவரை 600 கிலோ மீட்டர் தூரம் நிறைவு பெற்றுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00