இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானிக்கு Z பிரிவு விஐபி பாதுகாப்பு - பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மத்திய அரசு நடவடிக்கை

Aug 18 2022 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானிக்கு மத்திய அரசு Z பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்கியுள்ளது. அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகப் பணக்காரர்களிலும் முதல் 10 இடங்களில் நீடிக்கும் முக்கிய தொழிலதிபராக இருந்து வருகிறார். இவருக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல்கள் இருப்பதாக மத்திய உளவுத்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் அறிக்கை அளித்தன. இந்தநிலையில், அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்களின் Z பிரிவு விஐபி பாதுகாப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானிக்கு வழங்கப்படும் இந்த பாதுகாப்பு கட்டண அடிப்படையில் இருக்கும் என்றும், மாதத்திற்கு 15 முதல் 20 லட்சம் ரூபாய் அவரிடம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டுமுதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்களின் Z+ வகைப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00