ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடந்த என்கவுண்ட்டர் சம்பவம் போலியானது - உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்

May 20 2022 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள், காவல்துறையினரால் போலியாக என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த 2019ம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேர், காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்த விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணைக் குழு, தற்போது 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் என்கவுண்ட்டர் செய்த 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00