பஞ்சாப் பாட்டியாலா நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத்சிங் சித்து சரண் - விபத்து வழக்கில் சரணடைய கால அவகாசம் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆஜர்

May 20 2022 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலை வழக்கில் சரணடைய அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவஜோத் சிங் சித்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த 1988ம் ஆண்டு வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக குர்நாம் சிங் என்பவரை நவ்ஜோத் சிங் சித்து தாக்‍கியதாக கூறப்படுகிறது. இதில் குர்நாம் சிங் மரணமடைந்த நிலையில், சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 1999ல் பாட்டியாலா நீதிமன்றம் சரியான ஆதாரம் இல்லாததால் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து சித்துவை விடுவித்தது. ஆனால், 2006ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகியபோது,​ சித்து குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்த நிலையில், 34 வருடங்களுக்கு பிறகு சித்து குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டது. இதனிடையே, சரணடைய சிலவாரங்கள் அவகாசம் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் நவஜோத் சிங் சித்து மனு அளித்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்க மறுத்த நிலையில், சித்து பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00