மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் : பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் அறிவிப்பு

May 20 2022 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்கள், தங்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு பதிலாக, பொது நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான கடைசி நாள் வருகிற 22-ந்தேதியாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை 10 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பித்து இருப்பதாக யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

பொது நுழைவுத்தேர்வுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்‍கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். இந்த தேர்வுகள் வரும் ஜூலை 3-வது வாரத்தில் நடத்தப்படும் என்றும், இதற்கான கடைசி தேதி ஜூன் 18 ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கம்ப்யூட்டர் அடிப்படையிலான இந்த தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் என்றும் ஜெகதீஷ் குமார் கூறினார் .
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00