அசாமில் 29 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு : 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்‍கப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல்

May 20 2022 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாமில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்திற்கு 29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் அங்குள்ள பல ஆறுகளில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ​ஆயிரத்து 413 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சத்து 17 ஆயிரத்து 46 பேர் வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஹொஜய், லகீம்பூர் மற்றும் நகாவன் மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் கால்வாய்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டுள்ளன. அங்கு ரயில் மற்றும் சாலை போக்‍குவரத்து முற்​றிலும் தடைபட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00