காங்கிரசைச் சேர்ந்த நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு கடும் காவல் தண்டனை - 30 ஆண்டுகால வழக்‍கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

May 19 2022 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

34 ஆண்டுகளுக்கு முந்தைய சாலை விபத்து வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நவ்ஜோத்சிங் சித்து, கடந்த 1988-ம் ஆண்டு ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் சித்து மற்றும் அவரது நண்பருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை பஞ்சாப் உயர்நீதிமன்றம், 2006-ம் ஆண்டு நீக்கியது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனையை நிறுத்திவைத்ததுடன், சித்து மற்றும் அவரது நண்பரை ஜாமீனில் விடுவித்தது. இதனிடையே சித்துவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். ஆனால் சித்துவை விடுவித்த நீதிமன்றம், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. சித்துவுக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையை உறுதிச் செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00