பாலிவுட் திரைப்படத்தில் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என நடிகர் மகேஷ் பாபு தெரிவித்த கருத்தால் எழுந்த சர்ச்சை - அவர் நடித்த விளம்பர புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் விமர்சனம்

May 19 2022 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடிக்கடி சர்ச்சையில் சிக்‍கிப் பயணிக்‍கும் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, மீண்டும் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

தனக்‍கு பணம் கொடுக்‍கும் அளவுக்‍கு பாலிவுட் திரையுலகம் இல்லை என நடிகர் மகேஷ் பாபு கூறியிருந்தார். நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள Major படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹிந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் பதிலளித்தார். இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். நடிகர் மகேஷ் பாபு, மற்றொரு ஹிந்தி நடிகரான டைகர் ஷ்ரஃப் உடன் இணைந்து பான் மசாலா விளம்பரப் படத்தில் நடித்த காட்சியை அவர்கள் troll செய்துள்ளனர்.

பாலிவுட் திரைப்படங்களில் நடிக்‍க​விருப்பம் இல்லாவிட்டால், பான் மசாலா விளபரத்தில் நடித்து பணம் சம்பாதித்துக்‍ கொள்ளட்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ஹிந்தி படங்களில் நடித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறிய நடிகர் மகேஷ் பாபு, உடலுக்‍கு தீங்கு விளைவிக்‍கக்‍ கூடிய பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பது வேடிக்கையாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00