ஜி.எஸ்.டி. குழு பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது - ஜி.எஸ்.டி. மத்திய, மாநில அரசுகளுக்‍க சம உரிமை உண்டு எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

May 19 2022 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜிஎஸ்டி, வரி விதிப்பில் மாநிலங்கள், மத்திய அரசுக்கு சம அதிகாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம், ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய - மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்றும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு நம்பத் தகுந்த மதிப்பு மட்டுமே உண்டு என தீர்ப்பளித்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும் என நீதிபதிகள் சுட்டிக்‍காட்டினர். ஜிஎஸ்டி கவுன்சில், பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர, இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சட்டங்களை இயற்ற சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00