பிரதமர் மோடி, பத்திரிகையாளர்கள் முன்னால் ஏன் வருவதில்லை : காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
May 13 2022 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. மோடி பத்திரிகையாளர்கள் முன்னால் ஏன் வருவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கருத்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு.மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். பிற கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முன்னால் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறிய அவர், அதன்பின்னர் பயணத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஒரே கொள்கையை கொண்டிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று கூறினார். பாரதிய ஜனதாவை விமர்சித்த திரு.மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் திரு. மோடி, ஏன் பத்திரிகைகளுக்கு முன்னால் வருவதில்லை என்று தனக்குப் புரியவில்லை எனக் குறிப்பிட்டார்.