வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுகலை நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்கக்கோரும் மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
May 13 2022 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுகலை நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடப்பாண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியாவிடம் இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இதனிடையே 2021-22ம் ஆண்டுக்கான நீட் முதுகலை கலந்தாய்வே இன்னும் முடியாத நிலையில், இந்த ஆண்டுக்கான முதுகலை நுழைவுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வை ஒத்திவைக்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என அறிவித்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளதால், தேர்வை ஒத்திவைப்பது மிகக்பெரிய குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.