சூடுபிடிக்கும் உ.பி. தேர்தல் - முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் : பொதுமக்களை வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

Jan 23 2022 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், வீடு வீடாகச் சென்று வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உத்தர பிரதேசத்தில் திரு.யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கியுள்ளன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் அக்‍கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 312 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக 7 முன்னணி ஊடகங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. அனைத்து ஊடகங்களும் மீண்டும் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியை தக்‍கவைக்‍கும் என கணித்துள்ளது.

இந்நிலையில், கருத்துக்‍கணிப்பால் உற்சாகமடைந்துள்ள முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத், Ghaziabad மாவட்டத்தில் உள்ள Mohan Nagar பகுதியில், வீடு வீடாக பொதுமக்‍களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருடன் பா.ஜ.க.வினரும் சென்று தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00