நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல் - 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்

Dec 5 2021 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகாலாந்தில் Mon மாவட்டத்தில், Tiru பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால், பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் நடவடிக்‍கையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தாக்கியதை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வீரர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களுக்கும் பொதுமக்கள் தீ வைத்தனர்.

பொதுமக்கள் உயிரிழப்புக்கு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00