லக்‍கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைச் சம்பவம் : உச்சநீதிமன்றம் மீண்டும் நாளை விசாரணை

Oct 19 2021 7:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைச் சம்பவம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மீண்டும் நாளை விசாரணை நடத்துகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் Tikonia கிராமத்தில் 2 வாரங்களுக்‍கு முன்பு, மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ரா தனது காரை ஏற்றி, படுகொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உத்தரப்பிரதேச போலீசார் முதலில் நடவடிக்கை எடுக்காததால், உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதன்பின்னர், அஷிஷ் மிஸ்ராவைப் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பான வழக்‍கு, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்‍கு வருகிறது. தலைமை நீதிபதி திரு. N.V. ரமணா, நீதிபதிகள் திரு. சூர்யகாந்த், Hima Kohli ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது. விவசாயிகள் படுகொலைச் சம்பவத்தில் உத்தரப்பிரதேச போலீசார் உரிய நடவடிக்‍கை எடுக்‍காததால், இந்த விவகாரம் குறித்து உயர்நிலை நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்று கோரி, வழக்‍கறிஞர்கள் இருவர் தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, இப்பிரச்னை குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00