ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தொடரும் தீவிரவாதிகள் தாக்குதல்

Oct 19 2021 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, என்ஐஏவுக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களில் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்‍குதல்களில் மட்டும், 10-க்‍கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்‍கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தொடரும் தீவிரவாத தாக்குதல்கள் பொதுமக்‍கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையில், உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற, உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00