காஷ்மீரில் அதிகரிக்‍கும் பொதுமக்‍கள் மீதான தீவிரவாத தாக்‍குதல் : நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா

Oct 19 2021 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் அதிகரித்துள்ள தீவிரவாத தாக்‍குதல்கள் குறித்து பிரதமர் திரு. மோடியுடன் இன்று ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, வரும் 23-ம் தேதி ஜம்மு காஷ்மீர் சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்‍குதல்களில் மட்டும் 10-க்‍கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்‍கள் கொல்லப்பட்டனர். இது அங்குள்ள மக்‍கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு குறித்து, காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, இன்று காலை பிரதமர் திரு. மோடியை நேரில் சந்தித்தார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமருடன் அவர் முக்‍கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகக்‍ கூறப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய, 2 நாள் பயணமாக திரு. அமித்ஷா, வரும் 23-ம் தேதி காஷ்மீர் செல்கிறார். இந்த பயணத்தின் போது விமானப்படை, ராணுவம் மற்றும் மத்திய ஆயுதப்படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00