கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இடுக்கி அணையிலிருந்து 3 ஆண்டுகளுக்‍கு பின்னர் தண்ணீர் திறப்பு - விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்‍கப்படலாம் என தகவல்

Oct 19 2021 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையிலிருந்து 3 ஆண்டுகளுக்‍கு பின்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்‍கப்படலாம் எனக்‍ கூறப்படுகிறது.

கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. 3 தினங்களுக்‍கு முன்பு இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Blue Alert விடுக்கப்பட்டது. பின்னர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரித்து, நீர்மட்டம் மேலும் உயர்ந்ததால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Orange Alert விடுக்கப்பட்டது. இந்நிலையில், இடுக்‍கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்ததால், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்‍கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Red Alert விடுக்‍கப்பட்டுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு பெருமழைக்‍கு பின்னர், தற்போது இடுக்‍கி அணை திறக்‍கப்பட்டுள்ளது.

இடுக்‍கி அணையிலிருந்து முதற்கட்டமாக விநாடிக்‍கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்‍கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, 1 லட்சம் கனஅடி வரை திறக்கப்படலாம் எனக்‍ கூறப்படுகிறது. இடுக்‍கி அணை திறக்‍கப்பட்டதையடுத்து, இடுக்‍கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00