காஷ்மீரில் அதிகரிக்கும் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல் : நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை

Oct 19 2021 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் பொதுமக்‍கள் மீதான தீவிரவாத தாக்‍குதல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து, உயர் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்‍குதல்களில் மட்டும் 10-க்‍கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்‍கள் கொல்லப்பட்டனர். இது அங்குள்ள மக்‍கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்‍கூட்டத்தில், காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், உள்நாட்டு பாதுகாப்பில் போலீசார் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00