கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்‍கி பலி எண்ணிக்‍கை 38-ஆக உயர்வு - நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்‍கை

Oct 19 2021 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்‍கி பலியானோரின் எண்ணிக்‍கை 38-ஆக உயர்ந்துள்ள நிலையில், நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்‍கை விடப்பட்டுள்ளது.

கேரளாவின் கோட்டயம், இடுக்‍கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. கோட்டயம் மற்றும் இடுக்‍கி மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்‍கி அதிகம்பேர் பலியாகினர். கோட்டயம் மாவட்டம் முண்டகயத்தில் மணிமலையார் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வீடு ஒன்று முழுமையாக அடித்து செல்லப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில், பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ள நீர் வீடுகளுக்‍குள் புகுந்து மக்‍களின் உடமைகளை அடித்து சென்றது.

இந்த நிலையில், கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்‍கி பலியானோர் எண்ணிக்‍கை 38-ஆக உயர்ந்துள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 24 மணி நேரமும் செயல்படும் என முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்‍கி இறந்தவர்களின் குடும்பங்களுக்‍கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் என தெரிவித்துள்ளார். இதனிடையே கேரளாவில் நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00