இந்தியாவிலேயே உருவாக்‍கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க முடிவு - 26-ம் தேதி உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஆலோசனை

Oct 19 2021 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவிலேயே உருவாக்‍கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு வருகிற 26 ஆம் தேதி கூடுகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் அவசியம். இதற்கு தேவையான ஆவணங்களை பாரத் பயோடெக்‍ நிறுவனம் ஏற்கனவே அளித்துவிட்டது. கடந்த செப் 27ம் தேதி கோவாக்சின் தரப்பில் கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்து வரும் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு வருகிற 26ம் தேதி கூடி ஆ​லோசிக்‍க உள்ளது. கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைத்தால் அந்த தடுப்பூசியை 2 தவணை போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுக்கு சென்று வர தடையில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00