ஆதார் தகவல்களை சீன ஹேக்‍கர்கள் திருடியதாக வெளியான தகவல் - ஆதாரில் பல அடுக்கு பாதுகாப்பு உள்ளதால் வாய்ப்பே இல்லை என மத்திய அரசு விளக்‍கம்

Sep 22 2021 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆதார் தகவல்களை சீன ஹேக்‍கர்கள் திருடியதாக தகவல் வெளியான நிலையில், ஆதாரில் பல அடுக்கு பாதுகாப்பு உள்ளதால், தகவல்களை நெருங்கக்‍ கூட முடியாது என மத்திய அரசு விளக்‍கம் அளித்துள்ளது.

ஆதார் தகவல்கள் மற்றும் பிரபல ஆங்கில செய்தித்தாளின் தகவல்களை சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்‍கர்கள் திருடியதாக Recorded Future என்ற சைபர் செக்‍யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. Winnti மற்றும் Cobalt Strike உளவு மென்பொருட்கள் மூலம் ஆதார் தகவல்கள், கடந்த ஃபிப்ரவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான கால கட்டத்தில் திருடப்பட்டதாக சைபர் செக்‍யூரிட்டி நிறுவனம் கூறியுள்ளது. இந்த உளவு மென்பொருட்கள், சீனாவின் APT எனப்படும் சைபர் அச்சுறுத்தல் குழுக்‍களால் அரசு ஆதரவுடன் கையாளப்படுபவை எனக்‍ கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதார் தகவல்கள் திருடப்படவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆதாரில் பல அடுக்கு பாதுகாப்பு உள்ளதால், அதன் தகவல்களை நெருங்கக்‍ கூட முடியாது என மத்திய அரசு விளக்‍கம் அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00